அதே திருட்டு முழி.. செம க்யூட்டா இருக்கும் இந்த குட்டிபையன் யார் தெரியுமா? எல்லாருக்கும் பிடித்த அந்த விஜய் டிவி பிரபலம்தான்!!

அதே திருட்டு முழி.. செம க்யூட்டா இருக்கும் இந்த குட்டிபையன் யார் தெரியுமா? எல்லாருக்கும் பிடித்த அந்த விஜய் டிவி பிரபலம்தான்!!


makapa childhood photo viral

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் பலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல ஹிட் நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். இவரது கலகலப்பான பேச்சிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் அவர் தொகுப்பாளினி பிரியங்காவுடன் சேர்ந்து செய்யும் ரகளைகள் வேற லெவல். இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினால் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. மாகாபா வெள்ளித்திரையிலும் களமிறங்கி வானவராயன் வல்லவராயன், பஞ்சுமிட்டாய் என சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Makapaஇந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாகாபா, பெண் வேடமிட்டு செம க்யூட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இது யார் என தெரிகிறதா? என்று கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் அதே திருட்டு முழி. அழகா இருக்கீங்க மாகாபா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.