சினிமா

அடஅட.. நம்ம தலக்கு செம தில்லுதான்பா! தொகுப்பாளர் மாகாபா வெளியிட்ட புகைப்படத்தைக் கண்டு பீதியடைந்த ரசிகர்கள்!! ஏன்னு பார்த்தீங்களா??

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து ரசிகர்கள

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு பெருமளவில் பிரபலமானவர் மாகாபா ஆனந்த்.தனது கலகலப்பான பேச்சாலும், செயலாலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த மாகாபாவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அதிலும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்காவும் இணைந்து தொகுத்து வழங்கினாலே கலகலப்புக்கும், சிரிப்புக்கும் பஞ்சமிருக்காது. மேலும் மாகாபா வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாகாபா ஆனந்த் ஆங்கிலோ இந்திய பெண் சுசிலா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் தற்போது மாகாபா வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மாகாபா புலிக்குட்டிகளுக்கு மத்தியில் அதன் கூண்டில் இருப்பதுபோன்ற புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் தலக்கு தில்லை பார்த்தியா? என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர் இது உண்மையான புலிக்குட்டியா இல்லை பொம்மையா எனவும் கேட்டு வருகின்றனர்.


Advertisement