வாவ்.. முதன்முதலாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட மகத்! வேற லெவலில் என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா!!

வாவ்.. முதன்முதலாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட மகத்! வேற லெவலில் என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா!!



magath-post-son-photo-in-instagram

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்தியில் பிரபலமானவர் மகத். தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான அவர் அதனைத் தொடர்ந்து காளை, மங்காத்தா, ஜில்லா போன்ற பல படங்களில் துணை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மகத் பிரபல மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் சிம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த பிராச்சிக்கு ஜூன் 7-ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் மகத் தனது மகனுடன் முதன்முதலாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது மகனுக்கு அதியமான் என பெயரிட்டுள்ளதாகவும், தனது மகனுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அழகிய தமிழ்பெயர் என வாழ்த்தி வருகின்றனர்.