சினிமா

விஜய் - சங்கீதா திருமண நாளை முன்னிட்டு ரசிகர்கள் அடித்த வித்தியாசமான போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம்.!

Summary:

Madurai vijay fans printed different poster

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் விஜய். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. இவரின் பிறந்த நாள், திருமண நாள், பட வெளியீடு ஆகியவற்றை திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

அதேபோல் நேற்று விஜய் - சங்கீதாவின் திருமண நாளை மதுரையில் உள்ள ரசிகர் மன்ற உறுப்பினர்கள் வித்தியாசமான போஸ்டர் அடித்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.

 

மேலும் அந்த போஸ்டரில் மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவி என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவர் என விஜய்யை எம்ஜிஆர் போலவும் போஸ்டரில் சித்தரித்து இருந்ததால் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement