சினிமா

வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க.! மாதவனை கண்டித்த அவரது மனைவி! அதுவும் இந்த ஒத்த புகைப்படத்திற்காக.!

Summary:

வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க.! மாதவனை கண்டித்த அவரது மனைவி! அதுவும் இந்த ஒத்த புகைப்படத்திற்காக.!

தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் மாதவன்.  ரொமான்டிக் காதல் திரைப்படமான இதில் நடித்ததை தொடர்ந்து அவர் இளம்பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தார். சாக்லேட் பாயாக வலம் வந்த அவரை திருமணம் செய்து கொள்ள பலரும் விரும்பினர். மேலும் ஏராளமான படவாய்ப்புகளும் குவிந்தது. 

 அதனைத் தொடர்ந்து ஏராளமான காதல் திரைப்படங்களில் நடித்த மாதவன் பின்னர் தற்போது ஆக்ஷன் ஹீரோவாகவும் வலம்வருகிறார். அவர் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் செம பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது ராக்கெட்ரி; நம்பி விளைவு’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம் டிசம்பர் 17 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் மாதவன் அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.இந்த நிலையில் அவர் அண்மையில் சட்டை இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பெருமளவில் வைரலான நிலையில் அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வந்துள்ளது. ஆனால் அது நடிகர் மாதவனின் மனைவிக்கு பிடிக்கவில்லையாம். அதற்கு அவர் 51 வயதில் இதெல்லாம் தேவையா? வயதுக்கு ஏற்றார்போல் நடந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளாராம். அதனை மாதவனே பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


Advertisement