14 வருஷம் கழித்தும் அதே அழகு! எந்த பந்தாவும் இல்லை! பிரபல நடிகையை புகழ்ந்து தள்ளும் நடிகர் மாதவன்!

Summary:

Madhavan talking about actress anushka

ஹேமன் மதுக்கூர் இயக்கத்தில் நடிகை அனுஷ்கா மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் திரைப்படம் சைலென்ஸ். மேலும் இப்படத்தில் அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அனுஷ்கா காது கேளாத, வாய் பேச முடியாத ஓவிய பெண்ணாக நடித்துள்ளார்.

 கிரைம் மற்றும் திரில்லர் படமான சைலன்ஸ் திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியான நாளை அமேசான் ப்ரைமில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் மாதவன் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்பொழுது அவர் நடிகை அனுஷ்கா குறித்து கூறுகையில், நானும் அனுஷ்காவும் ரெண்டு படத்தில் ஜோடியாக நடித்தோம். அப்பொழுது அவர் சினிமாவுக்கு புதிது. மிகவும் அழகாக இருப்பார். 

தற்போது 14 வருடங்கள் கழித்து  நாங்கள் இருவரும் சைலென்ஸ் படத்தில் நடித்துள்ளோம். அனுஷ்காவிடம் அதே அழகுதான். அவரது தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. எவ்வளவு பெரிய நடிகை ஆகிவிட்டார் என்றாலும் அவரிடம் எந்த பந்தாவும் கிடையாது என புகழ்ந்து கூறியுள்ளார்.


Advertisement