இந்த ஹிட் திரைப்படங்கள் எல்லாம் மாதவன் தவறவிட்ட படங்களா ?! என்னென்ன படங்கள் தெரியுமா..

இந்த ஹிட் திரைப்படங்கள் எல்லாம் மாதவன் தவறவிட்ட படங்களா ?! என்னென்ன படங்கள் தெரியுமா..



Madhavan missed his chance at acting hit movies

2000ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய "அலைபாயுதே" திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மாதவன். முதல் படமே வெற்றி பெற்றதையடுத்து கெளதம் மேனன் இயக்கிய "மின்னலே" திரைப்படத்தில் நடித்தார். அதுவும் நல்ல பாராட்டை பெற்றது.

Madhavan

தொடர்ந்து டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், ஆயுத எழுத்து, இறுதிச் சுற்று, விக்ரம் வேதா போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹிந்தியில் ரங் தே பசந்த், குரு, 3 இடியட்ஸ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்த மாதவன், அப்போது எதனாலோ சில படங்களை தவிர்த்து விட்டாராம். அந்த படங்கள் முறையே, சூர்யா நடித்த கஜினி மற்றும் காக்க காக்க, செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடித்த 7ஜி ரெயின்போ காலனி படமும் அடங்கும்.

Madhavan

மேலும் விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படமும், ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படமும் மாதவன் நடிக்க மறுத்த திரைப்படங்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நண்பன் படத்தின் ஹிந்தி வெர்ஷனில் மாதவன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.