சினிமா

திருமணம் செய்துகொள்ளலாமா? 18 வயது பெண்ணின் ஆசைக்கு மாதவன் என்ன பதிலளித்துள்ளார் பாருங்க!!

Summary:

madavan got love proposal from 18 year girl

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைப்பாயுதே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சாக்லேட் ஹீரோவாக மாறி பெண்களின் கனவுகண்ணனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவருக்கெனவே ஏராளமான பெண் ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில்  அவருக்கு திருமணமாகிவிட்டது என கேள்விபட்டதும் பெண் ரசிகர்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளானர். மேலும் அவருக்கு தற்போது தோலுக்கு மேல் வளர்ந்த பெரிய மகன் உள்ளார்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த படம் இறுதி சுற்று. அப்படத்தில் தலைமுடி, தாடி எல்லாம் நரைத்த பின்பும் அவரது சாக்லேட் ஹீரோ தன்மை மட்டும் குறையாமல் பெண்களை கட்டி இழுத்தது.
 
இந்நிலையில் சமீபத்தில் மாதவன் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் கண்ட பெண் ஒருவர் "எனக்கு 18 வயதாகிவிட்டது நான் உங்களை திருமணம் செய்ய நினைப்பது தவறா" என மாதவனிடம் கேட்டுள்ளார்.

              

அதற்கு அவர்  உங்களுக்கு என்னை விட மதிப்புமிக்க நபர் கிடைப்பார். கடவுளின் ஆசிர்வாதங்கள் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும் என பதிலளித்துள்ளார். 
 


Advertisement