#வீடியோ: என் தலைவனை பார்க்கணும்... மாநாடு FDFS-க்கு வந்த மாற்றுத்திறனாளி ரசிகர்..!

#வீடியோ: என் தலைவனை பார்க்கணும்... மாநாடு FDFS-க்கு வந்த மாற்றுத்திறனாளி ரசிகர்..!


maanaadu-movie-fdfs-show-physically-challenged-fan-arri

சிம்புவின் மாநாடு திரைப்படத்தை முதல் காட்சியில் பார்க்க, மாற்றுத்திறனாளி ரசிகர் திரையரங்கிற்கு வருகை தந்த நிகழ்வு நடந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தறித்து வழங்கியுள்ளார். எஸ்.ஜெ. சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ சந்திரசேகரர், பிரேம்ஜி ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

தீபாவளி பண்டிகையின் போது மாநாடு வெளியாகுவதாக இருந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அன்று வெளியாகாமல் போனது. அதனைத்தொடர்ந்து, நவ. 25 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்தது படக்குழு. 

cinema

ஆனால், நேற்று மாலை நேரத்தில் திடீரென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறது என அறிவித்த நிலையில், இரவின் போது படம் நாளை ரிலீஸ் செய்யப்படுவது அதிகாரபூர்வமாக உறுதியானது. 

வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் உருவான படம் என்பதாலும், இசையமைப்புபணியை யுவன் சங்கர் ராஜா மேற்கொண்டுள்ளார் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து, நேற்று நள்ளிரவு முதல் திரையரங்கில் குவிந்து வந்தனர். 

இந்த நிலையில், சிம்புவின் மாநாடு திரைப்படத்தை பார்க்க, மாற்றுத்திறனாளி திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார். முதல் காட்சியில் தனது தலைவரான சிம்புவை பார்க்க மாற்றுத்திறனாளி ரசிகர் வந்த நிலையில், அதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.