வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்தை அலையவிடும் லவ் டுடே பட நடிகர் பிரதீப் ரங்கநாதன்.!?

வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்தை அலையவிடும் லவ் டுடே பட நடிகர் பிரதீப் ரங்கநாதன்.!?



Love today director did not attend production company calls

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ஜெயம் ரவி. இவர் நடித்த திரைப்படம் கோமாளி. இப்படத்தில் இயக்குனராக தமிழ் திரை துறையில்  முதன்முதலாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் முதல் படமான கோமாளி மிகப் பெரும் வெற்றியை அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனை அடுத்து சில வருடங்களாக இவர் எந்த திரைப்படங்களிலும் இயக்காமல் இருந்தார்.

love today

மேலும் சமீபத்தில் லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. இப்படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதனின் இயக்கமும், நடிப்பும் பலரது பாராட்டையும் பெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில் கோமாளி படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வருவதால் தற்போது பிரதீப் ரங்கநாதன் மற்றும் கோமாளி பட குழுவினரை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்கலாம் என்ற முடிவில் பிரதீப் ரங்கநாதனிற்க்கு கால் செய்திருக்கிறது.

love today

ஆனால் பிரதீப், வேல்ஸ் நிறுவனத்தின் போனை எடுக்காமல் தட்டிக் கழித்துள்ளார். இதனால் கோமாளி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் அவர் மீது கோபமாக இருப்பதாக யூட்யூபில் பிரபல பத்திரிகையாளர் பேட்டி அளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.