சினிமா பிக்பாஸ்

லாஸ்லியாவின் வெற்றி! இன்று வெளிவரவிருக்கும் பிக்பாஸின் இருவருட ரகசியம்!! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Summary:

losliya going to take photo with bigboss

 பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது சாண்டி, ஷெரின், முகேன், லாஸ்லியா, தர்சன் மட்டுமே இறுதிக்கட்டத்தில் விளையாடி வருகின்றனர். இவர்களில்  முகேன் நேரடியாக இறுதிக்கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் பிக்பாஸ் எவ்வளவோ கடுமையான டாஸ்க் கொடுத்ததும் போட்டியாளர்கள் கடுமையாக முழுமூச்சுடன் உழைத்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்கை கொடுத்துள்ளார். அதில் ஒரு கூடையில் ஏராளமான பந்துகள் போடப்பட்டுள்ளது. அந்த பந்துகளில் வித்தியாசமான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தநிலையில் ஹவுஸ் மேட் அனைவரும் தங்களுக்கு பிடித்த பந்தை எடுத்துக் கொண்டு கண்களை கட்டிக்கொண்டு காலால் அதனை உடைத்து சரியான போல் போட வேண்டும். 

Bigg Boss 3 - 27th September 2019 க்கான பட முடிவு

இதில் முகேஷ் ஹெட் மசாஜ், தர்ஷன் முட்டை பரோட்டா கோழிக்கறி மற்றும் சாண்டி க்ரில் சிக்கன் மற்றும் ஷெரின் ஸ்பா என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த பந்தை எடுத்து விளையாடினர். இதில் தர்ஷன், ஷெரின், சாண்டி ஆகியோர் சரியான கோல் போட்டு வெற்றி பெற்றனர்.

மேலும் அனைவரையும் விட வித்தியாசமாக லாஸ்லியா பிக்பாஸ் உடன் புகைப்படம் என்ற ஸ்டிக்கர் ஒட்டபட்டிருந்த பந்தை தேர்வு செய்து வெற்றி பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து அவர் இன்று பிக்பாஸ் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார் எனவும், இரு வருடங்களாக காத்துவந்த ரகசியம் உடைந்து கம்பீரக்குரலுக்கான சொந்தக்காரர் யார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் .
 


Advertisement