சினிமா பிக்பாஸ்

தலைவரான அடுத்த கணமே லாஸ்லியா செய்த காரியம்.! பிற போட்டியாளர்களின் ரியாக்சனை பார்த்தீர்களா!!

Summary:

losliya first work after getting captionship

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். 

கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறினார். அதன்பின்னர் பிக்பாஸ் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கினார்.

Image result for Bigg Boss 3 - 9th September 2019 | Promo 1 

இந்நிலையில் நேற்று தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் வனிதா, தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் போட்டியிட்ட நிலையில், முதலில் வனிதா தன்னால் இதை செய்ய முடியவில்லை என்று விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் தர்ஷனும் லாஸ்லியாவிற்காக 
விட்டுக்கொடுத்து தன்னால் முடியவில்லை என்று சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து லாஸ்லியா கேப்டன் பதவியை பெற்றார்.
   
இந்நிலையில் தலைவியானவுடன் லாஸ்லியாவிற்கு  குழுக்களை பிரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. உடனே லாஸ்லியா வீட்டில் குறைவான நபர்களே இருப்பதால் அனைவரும் வேலையை பகிர்ந்தே செய்வோம். டீம் எலாம் வேண்டாம் என்று  கூறியுள்ளார். இதனால், குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement