சினிமா பிக்பாஸ்

நான்தான் காரணம்!! கதறி அழுத கவின்.! சூசகமாக லாஸ்லியாவின் தந்தை செய்த காரியத்தை பார்த்தீர்களா!!

Summary:

losliya father advised to losliya

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் மேட்டுமே உள்ளனர் .மேலும் கடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம் ஏற்பட்டது. 

இந்நிலையில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். அதன்படி நேற்று லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளார் மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தையை பார்த்த லாஸ்லியா ஆனந்தத்தில் கதறி அழுதுள்ளார்.

Image result for losliya father

ஆனால் வீட்டிற்குள் வந்த தந்தையோ மிகவும் கோபமாக என்ன செய்து கொண்டிருக்கிறாய்வெளியில் எல்லோரும் என்ன பேசுறாங்க தெரியுமா? நீ நீயாக இரு. வந்த வேலையை பாரு என கடுமையாக திட்டியுள்ளார். இதனைக் கேட்டு மனம் உடைந்த லாஸ்லியா கதறி அழுதுள்ளார் மேலும் இனி இதுபோன்று நடந்து கொள்ளமாட்டேன் எனவும் அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனை கண்ட கவின் இந்த பிரச்சினைக்கு நான்தான் காரணம் என கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இதனை கண்ட லாஸ்லியாவின் தந்தை ஆண்பிள்ளைகள் அழக்கூடாது. பிக்பாஸ் வீட்டிற்கு எதற்கு வந்துள்ளோம் அதனை மட்டும் பாருங்கள். விளையாட்டில் நன்கு கவனம் செலுத்துங்கள் என சமாதானமாக பேசியுள்ளார்.

 


Advertisement