தீவிர ரசிகர் கொடுத்த அழகிய பரிசு! சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து நன்றி கூறிய லாஸ்லியா! வைரலாகும் வீடியோ!!

losliya fan gave gift to her


losliya fan gave gift to her

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த அவர் செய்தி வாசிப்பாளர் ஆவார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்களிலேயே இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது. மேலும் பட்டாம்பூச்சி போல சுற்றித்திரிந்த இவருக்கு ஆர்மியும்  உருவானது. 

இவ்வாறு ரசிகர்களிடையே பிரபலமான இவர் கவினுடன் ஏற்பட்ட காதல் மூலம் சற்று மோசமான விமர்சனங்களை பெற்று வந்தார் . பின்னர் அவரது அப்பாவின் சந்திப்பிற்கு பிறகு சற்று உஷாரான லாஸ்லியா 105 நாட்களை கடந்து இறுதி வரை சென்று மூன்றாம் இடத்தை வென்றார். 

losliya

இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது பரம ரசிகர் ஒருவர் லாஸ்லியாவை ஓவியாமாக வரைந்து அவரிடம் வழங்கி இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார்.இதனை கண்டு உற்சாகமடைந்த லாஸ்லியா ரசிகரை கட்டிப்பிடித்து அவருக்கு நன்றி கூறியுள்ளார். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.