"10 படங்கள் மட்டுமே இயக்குவேன்" என்று லோகேஷ் கூறியதற்கு காரணம் இதுதானா.?

"10 படங்கள் மட்டுமே இயக்குவேன்" என்று லோகேஷ் கூறியதற்கு காரணம் இதுதானா.?



Lokesh started his own production company

தமிழ் திரை துறையில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் முதன் முதலில்  'மாநகரம்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.

Lokesh

இதனையடுத்து சிறிது காலம் பிரேக்கிற்கு பின்பு மீண்டும் திரைதுறையில் காலடி எடுத்து வைத்தார். இவர் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம், கைதி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்தன. 

சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான 'லியோ' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் லோகேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் 10 படங்களை மட்டுமே இயக்குவேன் என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Lokesh

இது போன்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் சமூக வலைதள பக்கத்தில் ஜி ஸ்குவாட் எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். இப்பதிவிற்கு ரசிகர்கள் 10 படங்கள் இயக்கிய பிறகு தயாரிப்பாளராக போகிறீர்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.