லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்ற ஆசைப்படும் நடிகர் யார் தெரியுமா.?Lokesh kangaraj wish to work with ms bhasker

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் 'மாநகரம்' திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

Lokesh

இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் சில வருடங்கள் பிரேக் எடுத்துக் கொண்டார். இதன் பிறகு மீண்டும் வந்து கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து தற்போது ரஜினி நடிப்பில் 'தலைவர் 171' திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

Lokesh

இது போன்ற நிலையில் லோகேஷ் கனகராஜ், நடிகர் எம் எஸ் பாஸ்கருடன் இணைந்து படத்தில் பணியாற்ற ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 'தலைவர் 171' படத்தில் எம் எஸ் பாஸ்கர் நடிக்கப் போகிறாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.