லோகேஷ் கனகராஜ்க்காக 7 மாத குழந்தையுடன் மனைவி செய்த செயல்.!

லோகேஷ் கனகராஜ்க்காக 7 மாத குழந்தையுடன் மனைவி செய்த செயல்.!


lokesh-kanagaraj-wife-did-something-for-his-succeeded-c

கோலிவுட் திரையுலக இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஒரு படத்தின் முடிவையே அடுத்த படத்தின் ஆரம்பமாக வைத்து புதிய அத்தியாயமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்திய பெருமை இவரையே சேரும். முன்னணி நடிகர்களை வைத்து தொடர் வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ்

மேலும் எம்.ஏ பட்டதாரி மற்றும் வங்கி ஊழியரான லோகேஷ் முதன் முதலாக 'மாநகரம்' திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். இதனையடுத்து கார்த்திக் நடித்து இவரது இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் லோகேஷிற்கு மிகப்பெரிய வெற்றியை அளித்தது.

விஜய் நடித்த மாஸ்டர், கமலஹாசன் நடித்த விக்ரம் போன்ற திரைப்படங்களும் லோகேஷ் இயக்கத்தில் வெளியான படங்களாகும். இத்தகைய நிலையில், லோகேஷ் கனகராஜின் பழைய தொலைக்காட்சி பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ்

அந்த பேட்டியில் அவருடைய மனைவி குறித்து பேசிருக்கிறார். அவர் கூறியதாவது, "நான் நீண்ட வருடமாக காதலித்து 2012ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டேன்.எனக்கு அத்விகா, ஆருத்ரா என்ற இரு மகள்கள் உள்ளனர். நான் என்னுடைய வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமா துறைக்கு சென்றபோது என் மனைவி தான் ஏழு மாத குழந்தையை வைத்துக்கொண்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார். என் வெற்றிக்கு காரணம் என் மனைவி தான்" என்று  பெருமையுடன் கூறியிருக்கிறார். இந்த பேட்டி தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது