கோவில் கோவிலாக சுற்றி வரும் லோகேஷ் கனகராஜ்.. என்ன காரணம் தெரியுமா.?Lokesh kanagaraj went to rameshwaram temple

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் முதன்முதலில்  'மாநகரம்' திரைப்படத்தை இயக்கினார் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.

Leo

இப்படத்திற்கு பின்பு சில வருடங்களாக எந்த திரைப்படங்களையும் இயக்காமல் இருந்த லோகேஷ் கனகராஜ், மீண்டும் தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்தன.

இதனையடுத்து தற்போது இளைய தளபதி விஜய் நடிப்பில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் போன்ற பிரபலங்கள் நடிக்கும் ' லியோ ' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு நாளை வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.

Leo

இது போன்ற நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். சமீபத்தில் லியோ பட குழுவினருடன் திருப்பதி சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. ராமேஸ்வரம், திருச்செந்தூர் போன்ற இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.