எல்லாம் போலி..! மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திடீர் அறிவிப்பு.!

எல்லாம் போலி..! மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திடீர் அறிவிப்பு.!


Lokesh kanagaraj talks about fake social media accounts

மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரின் பாராட்டை பெற்றதை அடுத்து முதல் படத்திலையே புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

இதனை அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். விஜய்யின் பிகில் படத்துடன் போட்டியாக தீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இரண்டு படங்களும் தொடர் வெற்றியை தர மூன்றாவதாக தளபதியிடம் கதை கூறினார் லோகேஷ் கனகராஜ்.

master

தளபதியும் ஓகே சொல்ல, இவர்கள் கூட்டணியில் உருவாகி ரிலீசுக்காக காத்திருக்கிறது மாஸ்டர் திரைப்படம். இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது டிவிட்டர் பக்கத்தில், நான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளத்தில் இல்லை. டிவிட்டரில் மட்டுமே இருக்கிறேன்.

எனது பெயரில் உலா வரும் அனைத்தும் போலி கணக்குகள் என்று கூறியுள்ளார்.