"எனக்கு வேற வழிதெரியல.. இப்படி செஞ்சா மட்டும் தான் திருந்துவாங்க" - போதைப்பொருள் குறித்து லோகேஷ் கனகராஜ் ஓபன்டாக்..!!

"எனக்கு வேற வழிதெரியல.. இப்படி செஞ்சா மட்டும் தான் திருந்துவாங்க" - போதைப்பொருள் குறித்து லோகேஷ் கனகராஜ் ஓபன்டாக்..!!


lokesh-kanagaraj-opentalk-about-drugs

விக்ரம், மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

பொதுவாகவே தனது படங்களில் போதைப்பொருட்கள் குறித்து குறிப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அது ஏன்? என்பது குறித்து அவரிடம் கேட்டபோது, "தற்போது போதைபொருட்களின் பயன்பாட்டை அதிகமாக பார்க்க முடிகிறது. இதனை முற்றிலும் தடுக்க தான் அனைவரும் முயற்சி செய்கிறோம். 

Director lokesh

எனது படத்தில் போதைபொருட்கள் குறித்து கூறுவதன் காரணமும் இதுதான். போதை பொருட்களுக்கு எதிரான செயல்பாட்டில் பெரிய நட்சத்திரங்கள் நடிப்பதால், ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். நிச்சயம் இதனால் ஒரு மாற்றம் உருவாகும் என்பது எனது நம்பிக்கை.

அதற்காகத்தான் எனது படங்களில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாகவும், அதனால் ஏற்படும் விளைவு தொடர்பாகவும் எடுத்துக்கூறி வருகிறேன்" என்றார். இதற்கு ரசிகர்களும் தங்களது முயற்சி வெற்றிபெற வேண்டும் என கூறி வருகின்றனர்.