மாஸ்டர் படத்திற்காக கோவிலுக்குச்சென்று வழிபட்ட லோகேஷ், அனிருத்! என்ன வேண்டியுள்ளார்கள் பார்த்தீர்களா!!

மாஸ்டர் படத்திற்காக கோவிலுக்குச்சென்று வழிபட்ட லோகேஷ், அனிருத்! என்ன வேண்டியுள்ளார்கள் பார்த்தீர்களா!!


lokesh and aniruth went to temple and pray for master movie

தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் டீஸரானது கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகி உச்சகட்ட வரவேற்பை பெற்றது.  பட வெளியீடு நெருங்கியதையடுத்து மாஸ்டர் படக்குழு சில நாட்களாக படத்தின் ப்ரோமா காட்சிகளை வெளியிட்டு வருகிறது.


இந்நிலையில் தற்போது மாஸ்டர் படம் வெற்றியடைய வேண்டும் என வேண்டி மாஸ்டர் படக்குழுவினர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் அவர்களது  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.