தனது 3 படத்திலேயும் போதைப்பொருள்தான் மையக்கரு! ஏன்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறிய பலே விளக்கம்!!

தனது 3 படத்திலேயும் போதைப்பொருள்தான் மையக்கரு! ஏன்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறிய பலே விளக்கம்!!



logesh-kanagaraj-talk-abour-drugs-story-in-his-movie

தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள் மாநகரம், கைதி, மாஸ்டர். இந்த திரைப்படங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  மேலும் அவரது இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளை அதிரவைத்து கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட பல பிரபலங்களும் மாஸான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் வெளியான 3 நாட்களிலேயே 150 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. இந்த நிலையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

lokesh ganagaraj

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, மாஸ்டர், விக்ரம்என 3 திரைப்படமுமே போதைப்பொருளை மையமாகக் கொண்டுதான் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு அவர் இது சமூக அக்கறையின் காரணமாக, படங்கள் வெறும் பொழுதுபோக்கு படங்களாக மட்டும் இல்லாமல் சமூகத்திற்கு தேவையான ஒரு மெசேஜ் சொல்வதாக இருக்கவேண்டும் என்பதற்காக அவ்வாறு உருவாக்கபட்டுள்ளது. மேலும் கமல்,விஜய் போன்ற பெரிய ஸ்டார்கள் இதுகுறித்து பேசினால் சட்டவிரோதமான போதைப்பொருள்கள் இல்லாத சமூகம் உருவாகும் என்ற நோக்கத்திலேயே அவ்வாறு படம் எடுப்பதாக கூறியுள்ளார்.