சினிமா

தளபதியின் மாஸ்டர் ஓடிடியில் வெளியாகிறதா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல்!

Summary:

Logesh gnagaraj talk about master movie

மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில்  கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் ஏற்ப்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை ஓ.டி.டியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும், படக்குழுவினருடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், மாஸ்டர் படத்தை ஏப்ரல் 9-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு படவேலைகளை விரைந்து முடித்தோம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் படம் வெளியாவது தடையானது.

இது எங்களுக்கு பெரும்  ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் . தியேட்டரில்தான் வெளியாகும். முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படம் பார்த்து விட்டோம். நன்றாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திரையரங்குகள் எப்பொழுது திறக்கப்படும், கொரோனா பிரச்சினைகள் பொறுத்துதான் அப்டேட்டுகள் வெளியிட முடியும். தற்போது நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.


Advertisement