மாஸ்டர் 50 வது நாளில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்! வைரலாகும் விஜய்- விஜய் சேதுபதி மாஸ் வீடியோ!

மாஸ்டர் 50 வது நாளில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்! வைரலாகும் விஜய்- விஜய் சேதுபதி மாஸ் வீடியோ!


logesh-gnagaraj-post-surprise-video-on-50th-day-celebra

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி
பொங்கலை முன்னிட்டு  வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும், ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், மகேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையிலே திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 50 நாட்கள் ஆகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் அதனை பகிர்ந்து வருகின்றனர்.