அட.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இப்படியொரு ஆசையா?? நடந்தா செம மாஸாதான் இருக்கும்!!

அட.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இப்படியொரு ஆசையா?? நடந்தா செம மாஸாதான் இருக்கும்!!


logesh-ganagaraj-wish-to-direct-ajith

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து அவர் கார்த்தியை வைத்து 
கைதி, விஜய் நடிப்பில் மாஸ்டர் போன்ற படங்களை  இயக்கி இருந்தார். இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று ஹிட்டானது. 

மேலும் இறுதியாக அவர் கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலையும் வாரி இறைத்தது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.

logesh ganagaraj

இந்நிலையில் சென்னையில் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா  நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்பொழுது லோகேஷிடம் செய்தியாளர்கள், நடிகர் அஜித்துக்கு ஸ்கிரிப்ட் இருக்கா? அவரோடு திரைப்படம் இயக்குவீர்களா? என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் கண்டிப்பாக அஜித் சார் கூட வேலை செய்யும் ஆசை இருக்கு. காலம், கதைதான் இதையெல்லாம் முடிவு பண்ணும். எனக்கு எல்லோர் கூடவும் வேலை செய்யணும் என அவர் கூறியுள்ளார்.