அட.. இவருமா?? செம எதிர்பார்ப்புடன் பிரபல இயக்குனர் வெளியிட்ட பதிவு! ஆச்சரியத்தில் மூழ்கிய தளபதி ரசிகர்கள்!!

அட.. இவருமா?? செம எதிர்பார்ப்புடன் பிரபல இயக்குனர் வெளியிட்ட பதிவு! ஆச்சரியத்தில் மூழ்கிய தளபதி ரசிகர்கள்!!


Logesh ganagaraj tweet about beast update

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா,டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் அண்மையில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் படத்தின் டீசர், இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

அண்மையில் கூட தளபதி ரசிகர்கள் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட வீடியோ வைரலானது. இந்நிலையில் ஹைலைட்டாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ‘பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ்’ என்று பதிவிட்டுள்ளார். அது வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் உங்களது நெருங்கிய நண்பரே பீஸ்ட் அப்டேட் கேட்டுள்ளார் இப்போதாவது கூறுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.