தளபதியின் மாஸ்டரை தொடர்ந்து அடுத்து யாருடைய படம்! ரகசியத்தை உடைக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

தளபதியின் மாஸ்டரை தொடர்ந்து அடுத்து யாருடைய படம்! ரகசியத்தை உடைக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!


logesh-ganagaraj-next-movie-announced-today

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்  லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து அவர் கைதி படத்தை இயக்கியதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். பின்னர் தனது 3வது படமாக லோகேஷ் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில் தள்ளிப் போயுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அவர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர் அதற்கு முன்  கமலை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும், கைதி இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும் செய்திகள் பரவியது.

இந்தநிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவிருக்கும் அடுத்தபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று செப்டம்பர் 16 மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  இந்நிலையில் பல பிரபலங்களின் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.