தமிழில் பேசி கலக்கிய தோனி & சாஷி.. தமிழில் முதல் படம் ஏன்?; மனம் திறந்த தோனி.! கலாய்த்த நடிகர் யோகிபாபு.!  LGM Movie Trailer Release Speech Dhoni Sakshi YogiBabu 

 

நடிகர் ஹரிஷ் கல்யாண், நதியா, இவனா, யோகிபாபு உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் Lets Get Married. எம்.எஸ் தோனியின் படத்தயாரிப்பு நிறுவனமான தோனி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு எம்.எஸ் தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். 

இந்த படம் மாமியார் - மருமகள் இடையேயான பந்தத்தை உணர்த்தும் படமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. நேற்று படத்தின் டிரைலர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலர் வெளியீட்டு விழாவில் வைத்து தோனி மற்றும் சாக்ஷி தோனி உரையாற்றினார். 

cinema news

சாக்ஷி தோனி பேசுகையில், "எப்படி இருக்கீங்க?. எனது கணவர் தோனிக்கும், சென்னை மக்களின் அன்புக்கும் நீண்ட பந்தம் உள்ளது. அதனாலேயே எங்களின் முதல் படத்தை நாங்கள் தமிழில் தயாரித்து வெளியிட முடிவெடுத்தோம்" என பேசினார். 

அதனைத்தொடர்ந்து தோனி பேசுகையில், "சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க. சென்னை என்னை அரவணைத்துக்கொண்டது. தமிழக மக்களின் அன்பும், நேசமும் என்னை ஈர்த்தது. இந்த பந்தம் எப்போதும் நமக்குள் தொடரும். 

cinema news

எங்களின் முதல் படம் குறித்து இயக்குனரிடம் பேசுகையில், படம் வெற்றியோ தோல்வியோ என கவலைப்பட வேண்டாம். நீங்கள் உங்களின் பணியை சரியாக செய்யுங்கள் என்று கூறினேன்" என பேசினார். 

இவ்விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், தனக்கு படத்தில் வாய்ப்பளித்த தோனிக்கு நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து யோகி பாபு பேசுகையில், "தோனி கையெழுத்திட பெட் வழங்கியதற்காக மட்டுமே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்" என நகைப்புடன் பேசினார்.