லியோ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது: ஹெரால்ட் தாஸின் மாஸ் கிளிக் இதோ.! இப்பவே டெம்ப் ஆகுதே..!



Leo Trailer from Tomorrow 5 Oct 2023 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையில், நடிகர்கள் இளையதளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், அர்ஜுன் தாஸ், பிரியா ஆனந்த், ஜாபர், மிஸ்கின், மன்சூர் அலிகான், மனோபாலா, கெளதம் வாசுதேவ் மேனன், ஜியார்ஜ் மரியான், சாண்டி மாஸ்டர், அபிராமி வெங்கடாசலம், கதிர், வையாபுரி உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் லியோ. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. படம் வெளியீடுக்கு முன்பே ஓ.டி.டி மற்றும் டிஜிட்டல் உரிமைகளில் பல நூறு கோடிகளை கடந்து இலாபம் பார்த்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை உறுதி செய்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

19 அக்டோபர் 2023 அன்று லியோ திரைப்படம் உலகளவில் வெளியாகவுள்ளது. அதற்கான பணிகளை படத்தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது. அதனை ரசிகர்களுக்கு தெரிவிக்கும்பொருட்டு, ஏற்கனவே படத்தின் பல புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது. 

இந்நிலையில், அர்ஜுன் நடித்து வரும் ஹெரால்ட் தாஸின் போட்டோவை வெளியிட்டுள்ள படக்குழு, நாளை டிரைலர் வெளியாவதாக தெரிவித்துள்ளது. அந்த போட்டோவில் அர்ஜுன் சிகிரெட்டுடன் மாஸாக காட்சி தருகிறார்.