வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
லியோ திரைப்பட வெற்றி விழா நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பு? வெளியான தகவல்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், இதுவரை 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் வெற்றிவிழா நேற்று முன்தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கௌதம் மேனன், திரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் வழக்கம்போல் ரசிகர்களுக்கு குட்டி கதை சொல்லி உற்சாகப்படுத்தினார்.
மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் விஜய் பற்றி புகழ்ந்து பேசினர். இதில் லியோ படத்தின் இணை இயக்குனர் ரத்னகுமார் விஜய், ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியின் ஒளிபரப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.