லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் அப்டேட்ஸ் .? ரசிகர்கள் சோகம்.!



Leo movie music released latest news

விஜய் நடிக்கும் "லியோ"  திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 5ம் தேதி மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் விஜய் படத்தின் இசை வெளியீட்டு  விழா நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

vijay

"மாநகரம்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை இயக்கி கோலிவுட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.இவர் தான் தற்போது விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், ஒன்றும் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். விஜயும் , அனிருத்தும் இணைந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இப்படத்தில் முதல் பாடலாக  "நா ரெடி .." பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

vijay

இந்நிலையில் தான் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல்கள் வெளியாகி, விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இல்லாமல் மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதால் சில விஜய் ரசிகர்கள் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.