லியோ திரைப்பட விவகாரம்.. அரசு அதிகாரிகளுடன் தயாரிப்பு குழுவினர் அவசர ஆலோசனை.!

லியோ திரைப்பட விவகாரம்.. அரசு அதிகாரிகளுடன் தயாரிப்பு குழுவினர் அவசர ஆலோசனை.!



leo-movie-issue-urgent-consultation-of-the-production-t

லியோ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் அதன் சிறப்பு காட்சிகளுக்காக அனுமதி வழங்க கோரி தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று மாலை அரசு அதிகாரிகளை சந்திக்க இருக்கிறது லியோ திரைப்படத்தின் தயாரிப்புக் குழு.

முன்னதாக காலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது லியோ தயாரிப்பு குழு. இதற்கு அனுமதி மறுத்த நீதிமன்றம் 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி தமிழக அரசிடம் மனு அளிக்கும் படியும் அந்த மனுவை பரிசீலித்து தமிழக அரசு நாளை மாலைக்குள் படக்குழுவிற்கு பதிலளிக்கும் படி தெரிவித்திருந்தது.

Kollywoodஇது தொடர்பாக காலை 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டி இன்று மாலை அரசு அதிகாரிகளை சந்திக்க இருக்கின்றனர் லியோ திரைப்பட குழுவினர். இதன் காரணமாக இருபதாம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஆகி இருக்கும் நிலையில் படம் வெளியாகும் முதல் நாள் டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கவில்லை.

Kollywoodஇது தொடர்பாக பேசியிருக்கும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி " திமுக அரசு என்றும் திரை துறையை முடக்க முயற்சிக்கவில்லை எனவும் திரைத்துறைக்கு ஊக்கமளித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்பட்டு இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.