அட செம மாஸ், வேற லெவல் போஸ்டர்... வைரலாகும் லியோ படத்தின் 2 வது போஸ்டர்...

அட செம மாஸ், வேற லெவல் போஸ்டர்... வைரலாகும் லியோ படத்தின் 2 வது போஸ்டர்...


Leo movie 2 nd look poster released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உலகம் முழுவதும் உள்ளது. இவர் தற்போது தனது 67 வது படமான லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

லியோ படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். அதாவது சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் லியோ படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. Keep calm and plot your escape என்ற வசனத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.