லியோ சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி; இதுதான் முதல் காட்சியின் நேரம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!Leo FDFS Announcement on 13 Oct 2023

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இப்படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ தரச்சான்றிதழ் வழங்கி இருக்கிறது. 

இப்படத்தில் நடிகர்கள் இளைய தளபதி விஜய், திரிஷா கிருஷ்ணன், அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மனோபாலா, ஜாபர் சித்திக், அபிராமி உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர்.

Leo

லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு முன்னதாக உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தின் முதல் காட்சி காலை 09:00 மணிக்கு தொடங்கப்பட வேண்டும். நள்ளிரவு 01:30 மணிக்குள் காட்சிகள் திரையிட்டு முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். அக். 19ம் தேதி திரைப்படம் வெளியாகும் அன்று, குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து திரைப்படம் திரையிடப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.