முதல்படம் ரிலீஸ் ஆயிருச்சு., அடுத்த படத்தோட மாஸ்டர் பிளானை வெளியிட்ட அண்ணாச்சி..! ஆர்வத்துடன் ரசிகர்கள்..!!

முதல்படம் ரிலீஸ் ஆயிருச்சு., அடுத்த படத்தோட மாஸ்டர் பிளானை வெளியிட்ட அண்ணாச்சி..! ஆர்வத்துடன் ரசிகர்கள்..!!



legend sarvanan next movie

தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட லெஜெண்ட் சரவணன். இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் நடிப்பில் இன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிய திரைப்படம் லெஜெண்ட். இப்படம் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

பெரிய நடிகர்களின் படங்கள் எத்தனை கோடிகளில் உருவாகுமோ அது போன்று சம்பளத்தை தவிர்த்து இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இந்த படத்திற்காக லெஜெண்ட் சரவணன் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா என்று பல இடங்களுக்கு சென்று பிரமோஷன் செய்தார்.

தொடர்ந்து கேரளாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் இவர் பேசிய போது, ட்ரெய்லரை பார்த்தால் சூப்பர் ஸ்டார் படம் போல இருக்கிறது. சூப்பர் ஹீரோவாக நடிப்பீர்களா? என்று நிருபர் ஒருவர் கேட்டுள்ளார். 

cinema

அதற்கு அண்ணாச்சியும் சட்டென, "கண்டிப்பாக நடிப்பேன். என்னுடைய அடுத்த படமே ஒரு சூப்பர் ஹீரோ கதைதான் என்றார். மேலும் அந்த படத்தை சர்வதேச அளவில் கண்டிப்பாக எடுத்து செல்வேன் என்று தெரிவித்துள்ளார். 

தனது முதல் படத்தையே பிரம்மாண்ட செலவில் தயாரித்து பேன் இந்தியா படமாக வெளியிட்ட சரவணன், அடுத்த படத்தில் என்ன செய்வார்? என தெரியாமல் அறிந்துகொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.