லெஜெண்ட் சரவணாவின் அடுத்த படத்தின் அசத்தல் அப்டேட்.. இயக்குனர் இவரா?

லெஜெண்ட் சரவணாவின் அடுத்த படத்தின் அசத்தல் அப்டேட்.. இயக்குனர் இவரா?


 Legend Saravanan movie shooting starts from tomorrow

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது 

பிரபல சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் தொடக்கத்தில் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இதனையடுத்து லெஜெண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

Legend saravanan

அந்த திரைப்படமும் ரசிகர்களையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஹீரோவானதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

அதன்படி, லெஜெண்ட் சரவணாவை வைத்து இயக்குனர் துரை செந்தில்குமார் புதிய திரைப்படம் ஒன்றில் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இயக்குனர் துரை செந்தில்குமார் இதுவரை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ், கருடன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.