அடுத்த படத்தின் அப்டேட்டை பற்றி அறிவித்த லெஜெண்ட் சரவணன்...

அடுத்த படத்தின் அப்டேட்டை பற்றி அறிவித்த லெஜெண்ட் சரவணன்...



Legend Saravanan announced next movie update

பிரபல இயக்குனர்கள் ஜோடியான ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ள தி லெஜண்ட் படத்தில் பிரபல தொழிலதிபரான லெஜன்ட் சரவணன் கதாநாயகனாக நடித்திருந்தார். முதலில் தனது கடை விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த நிலையில் தற்போது சினிமாவின் மீது தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சரவணனின் அடுத்த படம் பற்றிய அப்டேட்டை கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் தற்போது கதையை ரெடி பண்ணிக்கொண்டு இருக்கிறேன். என் அடுத்த படத்தின் அப்டேட் விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

Legend saravanan

மேலும் அவரின் ஒரு பேட்டியில் அரசியல் வருகையை பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளனர். அதற்கு என் அரசியல் வருகையை பற்றி மக்களும், மகேசனும் தான் முடிவு செய்யவேண்டும். அவர்கள் விரும்பினால் நான் நிஜமாக அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.