சினிமா

நடிகர் யோகிபாபுவுக்கு, லெஜெண்ட் சரவணா அருள் கொடுத்த சர்ப்ரைஸ்! வைரலாகும் அட்டகாச போட்டோஸ்!!

Summary:

பிரம்மாண்ட லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் ந

பிரம்மாண்ட லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து ஹீரோவாக ஆசைப்பட்ட அவர் தற்போது வெள்ளித்திரையில் கால்பதித்து புதிய படத்தில் நடித்து வருகிறார். லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருள் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர்.

மேலும் இப்படத்தில் அருள்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் யோகிபாபு கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

பின்னர் இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, படக்குழுவினர்கள் கேக் வெட்டி மீண்டும் அவரது பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அப்பொழுது உடன் லெஜெண்ட் சரவணா அருள் உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

    


Advertisement