"எனக்கு எண்டு கார்டே கிடையாது"!!! புதிய கெட்டப்பில் பட்டையை கிளப்பும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி!

"எனக்கு எண்டு கார்டே கிடையாது"!!! புதிய கெட்டப்பில் பட்டையை கிளப்பும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி!


legend-fame-actor-and-bussiness-person-saravanan-new-lo

தி லெஜன்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் சரவணன். சரவணா ஸ்டோர்ஸ் என்ற மிகப்பெரிய வர்த்தக நிறுவனத்தின் அதிபதியான சரவணன் அண்ணாச்சி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தனது வியாபார நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே சமூக வலைதளவாசிகளின் கேலி கிண்டல்களுக்கு ஆளானவர்.

எதையும் பொருட்படுத்தாமல் தனது படத்தை தானே தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு சமீபத்தில் ஓ.டி.டி இணையதளங்களில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை பார்த்த  இணையவாசிகள் பலரும் லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சியை உருவ கேலி செய்தும் கிண்டல்கள் செய்தும் பல்வேறு விதமான மீம்ஸ்களை இணையதளங்களில் பகிர்ந்தனர்.

The legend

இது எதுவும் தன்னை தடுத்து நிறுத்தாது என்பது போல தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார் லெஜன்ட்  சரவணன் அண்ணாச்சி. சமீபத்தில் இவர் காஷ்மீர் சென்றிருந்த போது எடுத்த புகைப்படத்தினை இணையதளத்தில் பகிர்ந்திருந்தார். அதனை வைத்து இவர் லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கயிருக்கிறார் என்ற வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பினர். அந்த செய்திகளில் உண்மை இல்லை என்று  பின்னர் தெரிந்தது.

The legend

தற்போது மீசை மற்றும் தாடியுடன் இருக்கும்  புகைப்படம் ஒன்றை இணையதளங்களில் பகிர்ந்திருக்கிறார் சரவணன். அந்தப் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது இது அவரது புதிய படத்திற்கான கெட்டப்பாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை கிளீன் ஷேவில் மேக்கப்புடன் இருக்கும் அண்ணாச்சி இந்த முறை கொஞ்சம் மீசை தாடியை விட்டு மிரட்டலான லுக்கில்  காட்சியளிக்கிறார்.