கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
நிஜ வாழ்விலும் ஹீரோ என நிரூபித்த லாரன்ஸ்! புதிய சாதனையால் குவியும்! வாழ்த்துக்கள்!!
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து நடிகராக களமிறங்கி சினிமா துறையையே கலக்கிய நடிகர் ராகவா லாரன்ஸ். அவர் சினிமாவில் மட்டுமின்றி, தனது சொந்த வாழ்க்கையிலும் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார். ஆதரவற்ற குழந்தை மற்றும் முதியோர்களுக்கு இல்லம் அமைத்து உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் ராகவா இயக்கத்தில் காமெடி கலந்த நகைச்சுவையா பேய் படமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது முனி திரைப்படம். இப்படத்தை தொடர்ந்து. அதன் தொடர்ச்சியாக காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி அமோக வெற்றியை பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது காஞ்சனா 3 திரைப்படம் வெளிவர உள்ளது. அதில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள காஞ்சனா 3 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதற்கிடையில் இசை வெளியீட்டு விழாவிற்கு செலவாகும் தொகையை ஆதரவற்ற திருநங்கைகளுக்கு அளித்து உதவ வேண்டும் என பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை தவிர்க்குமாறு சன் நிறுவனத்திடம் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும். குடும்பத்தினரால் கைவிடப்பட்ட திருநங்கைகள் வசிப்பதற்கு வீடுகள் கட்டித்தர முயற்சி எடுப்பதாகவும், அதற்கு மக்கள் உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அதற்காக சென்னை மீஞ்சூரில் 1.25 கிரவுண்ட் நிலத்தை வாங்கியுள்ளார் இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.