"அஜித்தின் இந்த நிலைமைக்கு ரஜினி தான் காரணம்" இணையத்தில் வைரலாகும் செய்தி.!?

"அஜித்தின் இந்த நிலைமைக்கு ரஜினி தான் காரணம்" இணையத்தில் வைரலாகும் செய்தி.!?


Latest viral news about ajith and rajini

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அஜித். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்றும், தல என்றும் பெயர் பெற்றுள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த அஜித் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Ajith

அஜித் ஆரம்பகால கட்டங்களில் திரைப்படங்களில் பல தோல்வியை சந்தித்து இருந்தாலும், தற்போது தனது நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் பல ஹிட் திரைப்படங்களை அளித்து முன்னணி நடிகர் எனும் பெயர் பெற்றிருக்கிறார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நடிகர் அஜித் சினிமாவிற்கு வந்த ஆரம்ப கால கட்டத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு, பேட்டி, ரசிகர்கள் மன்றம் என்று பொதுவுலக சந்திப்பு  எதிலும் கலந்து கொள்வதில்லை.

மேலும் தனது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு தன்னை தல என்று அழைக்கக் கூடாது. அஜித் என்று மட்டும்  கூப்பிடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார். இவ்வாறு பொதியுலக தொடர்பு எதையும் விரும்பாத அஜித், சினிமாவின் ஆரம்ப காலத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, என்ன கேள்வி கேட்டாலும் பளிச்சென்று மனதில் தோன்றியதைக் கூறி விடுவாராம். இதனால் பல பிரச்சினைகளையும் சந்தித்து இருக்கிறார்.

Ajith

இதனால் ரஜினி இவரை அழைத்து "சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால், அதை நோக்கி மட்டுமே நம்மளுடைய கவனம் இருக்க வேண்டும். மற்ற விஷயத்தில் தலை காட்டினால் சினிமாவில் சாதிக்க முடியாது" என்று அறிவுரை கூறியிருக்கிறார். இதன் பிறகு அஜித் எந்த ஒரு விஷயத்திலும் தலையிடுவதில்லை என்று கூறப்பட்டு வருகிறது.