அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
வேட்டையன் படத்தில் ரஜினிக்கு மகனாக மாறிய பகத் பாசில்.. வில்லனாக போகும் பாகுபலி நடிகர்.!
தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக பல ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது திரைப்படத்திற்கு 'வேட்டையன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று சில மாதங்களில் நிறைவு பெற உள்ளது.

இது போன்ற நிலையில் வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிக்கு மகன் கதாபாத்திரத்தில் பகத் பாஸில் நடிப்பதாகவும், வில்லன் கதாபாத்திரத்தில் பாகுபலி நடிகர் ராணா நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.