விஷாலிற்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி..

விஷாலிற்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி..



latest-news-update-about-vishal-issue

உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தவர் விஷால். இவர் 2004ம் ஆண்டு "செல்லமே" திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து நடித்து வரும் அவர் "விஷால் பிலிம் பேக்டரி" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

case

இந்நிலையில், விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக, திரைப்பட பைனன்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸிடம் 21.29 கோடியை கடனாகப் பெற்றிருந்தார். இந்தக் கடனை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

அந்த கடனை திருப்பி செலுத்தும்வரை விஷால் பிலிம் பாக்டரியின் அனைத்து படங்களின் உரிமையையும் லைக்கா நிறுவனத்திற்கு தரவேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, "வீரமே வாகை சூடும்" படத்தை வெளியிட்டதற்காக விஷாலின் மீது லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

case

இந்நிலையில், இவ்வழக்கில் நேரில் ஆஜரான விஷாலிடம் அவரது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார் நீதிபதி. இதையடுத்து தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட விஷால் தரப்பினரிடம், "நீதிமன்றத்தின் முன் அனைவரும் சமம். நீங்கள் பெரிய ஆள் இல்லை. உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு ஏன் தொடரக்கூடாது?" என்று நீதிபதி கண்டிப்புடன் கூறினார்.