பிக் பாஸ் சீசன் 3 தமிழ்: சற்றுமுன் வெளியான சூப்பர் தகவல்! என்ன தெரியுமா?
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் பிக் பாஸ். சீசன் 1 , சீசன் 2 இரண்டுமே நல்ல வரவேப்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.
முதல் இரண்டு சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கினார். தற்போது சீசன் 3 விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த சீசனையும் கமல்தான் தொகுத்து வழங்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகிறது.
அரசியல், இந்தியன் 2 என பயங்கர பிசியாக இருக்கும் கமல் சீசனில் 3 இல் கலந்துகொள்வாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பூந்தமல்லி அருகேயுள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கான புரமோஷன் படப்பிடிப்பு தொடங்கி விட்டது எனவும், இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விரைவில் புரமோஷன் வீடியோக்கள் வெளியாகும் என்றும், பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூனில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.