"பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹருக்கு இந்த பிரச்சனை இருக்கா?!" அதிர்ச்சியில் பாலிவுட்!

"பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹருக்கு இந்த பிரச்சனை இருக்கா?!" அதிர்ச்சியில் பாலிவுட்!


Latest news about karan johar

பாலிவுட்டில் இயக்குனராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருப்பவர் கரண் ஜோஹர். இவர் "காபி வித் கரண்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்நிகழ்ச்சியில் 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

Karan

இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு அனைத்து விஷயங்களையும் மனம் திறந்து பேசுவது தான் சிறப்பு. சமீபத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் கலந்து கொண்ட எபிசோட் ஒளிபரப்பானது. அதில் அவர் பேசுகையில், "சமீபத்தில் நடந்த அம்பானியின் கலாச்சார மைய தொடக்க விழாவில் கலந்து கொண்டேன்.

அப்போது எனக்கு முகமெல்லாம் வியர்த்தது. அது கூட எனக்கு தெரியவில்லை. அப்போது நடிகர் வருண் தவான் என்னிடம் வந்து நலம் விசாரித்தார். உடனே என்னை அங்கிருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைத்தார். பின்னர் வீட்டிற்கு வந்து மிகவும் அழுதேன்.

Karan

ஏன் அழுதேன் என்று கூட தெரியவில்லை. 2016ம் ஆண்டு முதலே நான் மனப்பதட்ட பிரச்னையை சந்தித்து வருகிறேன். இதை வெளியே சொன்னால் தான் அதிலிருந்து மீளும் பக்குவம் கிடைக்கும். நான் மனப்பதட்ட பிரச்சனைக்கு மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதை சொல்வதில் தயக்கமில்லை" ஏன்று கூறியுள்ளார்.