"தணிக்கை குழுவின் பொறுப்பு எங்கே சென்றுவிட்டது!?" அனிமல் படம் குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் காட்டம்!

"தணிக்கை குழுவின் பொறுப்பு எங்கே சென்றுவிட்டது!?" அனிமல் படம் குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் காட்டம்!



Latest controversy news about animal movie

ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலில் சாதனை படைத்துள்ள திரைப்படம் "அனிமல்". இப்படத்தை "அர்ஜுன் ரெட்டி" படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.

rashmika

கிட்டத்தட்ட 700கோடி ரூபாய் வசூலித்துள்ள இப்படத்தில் ஏராளமான வன்முறைக் காட்சிகள் நிறைந்துள்ளன என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் "தளபதி 68" படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி "அனிமல்" படத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "அனிமல் படம் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துகிறது. திருமணம் என்ற பெயரில் நடக்கும் பாலியல் வன்முறைகள், தவறான உறவு முறைகள் உள்ளிட்ட பல தவறான கருத்துக்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

rashmika

மிருகத்தனமாக நடந்துகொள்ளும் கணவரிடம் மனைவி அமைதியாக இருப்பதுபோல் படம் எடுத்திருப்பது மிகவும் அபத்தமாக இருக்கிறது. இந்தப்படம் சமூகத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறதா? தணிக்கை குழுவின் பொறுப்பு எங்கே போனது?" என்று கடுமையாக சாடியுள்ளார்.