இதை பார்த்தா கவின் மனசு கஷ்டப்படாதா? ஆண்நண்பருடன் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! அதிர்ச்சியில் புலம்பும் ரசிகர்கள்!

இதை பார்த்தா கவின் மனசு கஷ்டப்படாதா? ஆண்நண்பருடன் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! அதிர்ச்சியில் புலம்பும் ரசிகர்கள்!


lasliyaa post last year photo with friends

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளர் ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் பட்டாம்பூச்சி போல சுற்றி திரிந்த இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்பட்டாளமும்,  ஆர்மியும் உருவானது. 

அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு சிறு சலசலப்பும், சர்ச்சையும் கிளம்பியது. மேலும் அவரது தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்து கண்டித்ததை தொடர்ந்து அவர் போட்டியில் தனது கவனத்தை செலுத்த துவங்கினார். பின்னர்105 நாட்கள் கடந்து இறுதிவரை சென்று லாஸ்லியா மூன்றாம் இடத்தை பிடித்தார்.

lasliya

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து மிகவும் பிசியாக இருக்கும் லாஸ்லியா தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.  மேலும் கவினும் லாஸ்லியாவும் சந்தித்து கொள்வார்கள், ஒன்றாக புகைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் கடந்த வருடம் தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை லாஸ்லியா வெளியிட்டுள்ளார். மேலும் ஆண்நண்பர் ஒருவருடனும் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கவின் ரசிகர்கள் லாஸ்லியா கவினை நினைத்து பாருங்கள், அவர் மனது காயப்படும் என பலகருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.