சினிமா பிக்பாஸ்

அந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யாதே! கண்ணீருடன் லாஷ்லியாவின் தாய் கூறிய உருக்கமான அறிவுரை!

Summary:

Lashliya mother talks to lashliya

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களே மீதம் உள்ள நிலையில் போட்டியாளர்களை சந்திக்க அவர்களது குடும்பத்தினர் வரிசையாக வந்துகொண்டிருக்கின்றன்னர்.

அந்த வகையில் நேற்று லாஷ்லியாவின் தாய், இரண்டு சகோதரிகள் மற்றும் தந்தை என அனைவரும் வந்திருந்தனர். முதலில் தாய் மற்றும் சகோதரிகள் மட்டுமே வந்தனர். அதன்பின்னர் சர்ப்ரைஸாக அவரது தந்தை வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக தனது மகளின் தவறை அவரது தாய் சுற்றிக்காட்ட ஆரம்பித்தார்.

எல்லா விசயங்களையும் சரியாக பண்ணும் லாஷ்லியா ஒரு விஷயத்தை மட்டுமே தவறாக செய்வதாக கூறினார். கவின் - லாஷ்லியா இடையேயான காதல் பற்றித்தான் அவர் அப்படி கூறினார். மேலும், தமது நெருங்கிய உறவுகள் நம்ம லாஷ்லியாவா இது என கேட்பதாகவும் கூறி கண்ணீர் சிந்தினார்.

அந்த விஷயத்தை இன்றே விட்டுவிட்டு விளையாட்டை விளையாட்டாக விளையாட்டு என மகளுக்கு அறிவுரை கூறினார் லாஷ்லியாவின் தாய்.


Advertisement