ரஜனியின் லால் சலாம் திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அறிவிப்பு.!

ரஜனியின் லால் சலாம் திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அறிவிப்பு.!



Lal salam movie release update

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Lal salam

இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

Lal salam

இந்த நிலையில் லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.