சினிமா

அடேங்கப்பா.. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்தானா இது! எடை குறைஞ்சு, மாடர்ன் உடையில் எப்படி இருக்காங்க பார்த்தீர்களா!!

Summary:

கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் லட்சுமி ராமகி

கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தில் சினேகாவுக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த அவர் தற்போது நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கி வருகிறார்.

இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் இவர் பல சங்கடங்களை, சிக்கல்களை, கிண்டல்களை சந்தித்தார். ஆனாலும் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியால் பயனடைந்தனர் என கூறப்படுகிறது. 

சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது உடல் எடை குறித்து செம ஸ்லிம்மாக, செம யங்காக மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் லட்சுமி ராமகிருஷ்ணன்தானா இது? என வாயடைத்து போயுள்ளனர்.


 


Advertisement